கரூர்: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு… கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
1959 முதல் 2005 ஆம் ஆண்டுவரை இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ – மாணவிகள் சுமார் 700 பேர்கள் 46 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டு பள்ளி மாணவர்களாக மாரி பழைய நினைவுகளை நினைத்து ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்த நிகழ்வு அவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1959 ல் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அரசுப் பள்ளி இருக்க வேண்டும் என்ற கட்டாய திட்டத்தில் கட்டப்பட்ட பள்ளி என்ற சிறப்பு பெற்றதாகும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பள்ளியில் 1959 முதல் 2005 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.. இந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவ – மாணவிகள் ஏராளமானோர் உயர்ந்த பணிகளிலும், டாக்டர், பொறியாளர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் உயர்த இடத்தில் உள்ளனர்.
46 ஆண்களுக்கு பிறகு தாங்கள் படித்த பாடசாலையில் சங்கமிக்கும் வாய்ப்பு கிடைத்தும் மிக்க மகிழ்ச்சியில் வாட் ஆப் மூலம் பழைய நண்பர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்து அனைவரும் குடும்பத்துடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழாவில், கற்றுத் தந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செய்து வணங்கினர்.
பின்னர், மாணவர்கள் படித்த வகுப்பின் அறைகளை பார்த்த மாணவ மாணவிகள் சிறிது நேரம் தங்களை மறந்து 46 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விட்டனர்.
வகுப்பறையில் தாங்கள் அமர்ந்திருந்த இடங்களை பார்த்தும், ஆசிரியர் எப்படியெல்லாம் பாடம் நடத்தினார் … அந்த ஆசிரியரின் ஸ்டைல், குறும்பு செய்து ஆசிரியரிடம் வாங்கிய திட்டு, சிறு சிறு அடிகள் பற்றி பழைய மாணவர்கள் ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியது.