சென்னை: சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அமெட் கடல்சார் பல்கலைக்கழகம், கடந்த 32 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான கடல்சார் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இது உலகத்தரம் வாய்ந்த கடல்சார் தொழில்நுட்ப மையமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
அமெட் ஆனது NAAC ஆல் ‘A’ கிரேடு, MoE, UGC, AICTE, DGS, டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங், இந்தியாவின் அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெட் பல்கலைக்கழகம் அதிநவீன தொழில்நுட்ப சிமுலேட்டர்கள், சிறப்பு மேம்பாட்டு மையங்கள், TNV இன் ISO 9001:2015 சான்றிதழ் மற்றும் உலகளாவிய கப்பல் நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன் வேகமாக நகரும் கடல்சார் தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முன்னணி நிலையை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஏஎம்இடி பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான மையம் கடந்த 11-ம் தேதி கடல்சார் நிலைத்தன்மையை வழிநடத்துதல் என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை நடத்தியது. இதில், அமெட் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். ஜெ. ராமச்சந்திரன், சீனாவின் டேலியன் பல்கலைக்கழக வேந்தர் ஷான் ஹாங்ஜுன், ஜப்பானின் IAMU நிர்வாக இயக்குநர் தகேஷி நகாசாவா, உலக கடல்சார் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பசுமை சூழலியலாளர்கள் கலந்து கொண்டு கடல்சார் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 3 புகழ்பெற்ற கடல்சார் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது கல்வி பரிமாற்றம், கூட்டு ஆய்வுகள், கூட்டு ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மாணவர் மற்றும் பேராசிரியர் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய வழிகாட்டுதலின் மூலம், அமெட் பல்கலைக்கழகம் உலகளாவிய விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு ஊக்கியாக உள்ளது, எதிர்காலத்தில் சிறந்த கடல்சார் நிபுணர்களை உருவாக்கி, நிலையான கடல்சார் தொழில்களுக்கு வழிகாட்டுகிறது.