சென்னை: பா.ம.க தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக ஆட்சியில்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதே நேரத்தில் சமூக நீதியை காக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுவாரா? யுஜிசி விதிகளில் ஒரு பங்கு, ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் மற்றொரு பங்கு. இந்த இரட்டை வேடம் எப்போது முடிவடையும்? இவ்வாறு அவர் கூறினார்.