தமிழகத்தில் பெரியவர்கள், இளைஞர்கள் மதுவால் சீரழிந்து விட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சமுதாயம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், மதுவால் இளைஞர்களின் வாழ்வு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுக்கடைகளை மூடக்கோரி நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தரமான கல்வி, குடிநீர், வேலை, வீடு, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.