சென்னை: தமிழ் புத்தாண்டை ஒட்டிகன்னியாகுமரி, கோவை, கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.
மங்களூரு – திருவனந்தபுரம்: மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.