சென்னை: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விளக்கம்:
ஏசி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06055) இன்று (ஆகஸ்ட் 14) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். எதிர் திசையில், ஏசி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06056) நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி சென்றடையும். இந்த ரயிலில் 14 மூன்று அடுக்கு ஏசி எகானமி பெட்டிகள் உள்ளன.
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவேக ஏசி ரயில் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஆவடி ஸ்டேஷனில் நின்று செல்லும்.
சென்னை – கொச்சுவேலி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக., ஏசி சிறப்பு விரைவு ரயில் (06043) 14 மற்றும் 21ம் தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
எதிர் திசையில், கொச்சுவேலியில் இருந்து ஆக., ஏசி சிறப்பு எக்ஸ்பிரஸ் (06044) 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்ட்ரலை சென்றடைகிறது.
இந்த ரயிலில் 15 மூன்று அடுக்கு ஏசி எகானமி பெட்டிகள் உள்ளன. இது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், திருச்சூர் வழியாக கொச்சுவேலியை அடைகிறது. இந்த 2 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.