தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களை அரசு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரத்தில் உள்ள ஆத்தூரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்று அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.