புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட நாட்டிலிருந்து விசா பெற வேண்டும். இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பிரதமர் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து வருகிறது.
இதன் மூலம் இந்தியர்கள் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு செல்ல முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் சேர உள்ளது. இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் இது அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.