கரூர்: ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்த பால் வேனை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்படும் ஆவின் பாலில் முறைகேடாக தண்ணீர் கலக்கப்படுவதாக கூறி கரூர் மாவட்டம் மயிலாடும் பாறையில் கூட்டுறவு சங்க பால் வேன் சிறைபிடிக்கப்பட்டது.
சென்னை ஆவினுக்காக எருமநாயக்கன் பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 5 கூட்டுறவு சங்கங்களில் பால் சேகரிக்கப்பட்டு திருமலை ரெட்டியபட்டியில் உள்ள பால் குளிரூட்டும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வழியில் வேனில் வைத்து, பாலை எடுத்து விட்டு அதற்கு ஈடாக தண்ணீர் கலக்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.