சென்னை: சென்னை எலியட் கடற்கரையில் (பெசன்ட் நகர்) ஆஸ்திரேலிய துணை தூதரகம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. ஆஸ்திரேலிய தூதரகம், க்ளீனப் ஆஸ்திரேலியா மற்றும் அர்பேசர் சுமீத் ஆகியவை இணைந்து நேற்று சென்னை பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்தின. இதில், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, சென்னைக்கான ஆஸ்திரேலிய துணை உயர் ஆணையர் சிலை சாகி ஆகியோர் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக நிகழ்வாகும். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் க்ளீனப் ஆஸ்திரேலியா பிரச்சாரம் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், மறுசுழற்சி மற்றும் நிலையான திட்டங்கள் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஊக்குவிக்கிறது.

நிகழ்ச்சியில் சுப்ரியா சாஹு பேசுகையில், “கிளீனப் ஆஸ்திரேலியா மற்றும் தமிழக அரசு தொடங்கியுள்ள ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரமும் பொதுவான இலக்கை நோக்கி நகர்கிறது. சென்னையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கேற்றதன் மூலம், இந்த பிரச்சாரங்களின் உணர்வை வெளிப்படுத்துகிறோம். நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.