தஞ்சாவூர்: கடற்படையில் வீரர்கள் மற்றும் மாலுமிகளின் செயல்பாடுகள் குறித்து தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் ரேடியண்ட் பன்னாட்டு பள்ளியில் இந்திய கடற்படை அதிகாரிகள், மாலுமிகள் ஆகியோர் கடற்படையில் செயல்பாடுகள், பணிகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடற்படை செயல்பாடுகள் குறித்த விளக்கப்படங்கள் காண்பிக்கப்பட்டன. மாணவர்களுடன் கடற்படை வீரர்கள் கலந்துரையாடினர். பின்னர் மாணவர்களின் கடற்படை பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து பள்ளி தாளாளர், செயலாளர், துணை முதல்வர் மற்றும் கடற்படை அதிகாரிகள், மாலுமிகள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி கடற்படை வீரர்கள், மாலுமிகளை வழியனுப்பி வைத்தனர்.