திருச்சி: உலக ரேபிஸ் தினத்தை ஒட்டி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான்
உலக ரேபிஸ் தினத்தையொட்டி, ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், உயிரைக் குடிக்கும் இந்த நோயை தடுக்க வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி போடவேண்டும், செல்லப்பிராணிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியின் போது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி செல்ல பிராணிகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.
விலங்குகள் உலகம் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்ஃப்ளை இணைந்து நடத்திய விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பேரணியாக சென்றனர். திருச்சி ஸ்டூடண்ட்ஸ் சாலையில் இருந்து புறப்பட்டு, வெஸ்ட்ரி பள்ளி மைதானம்வரை சென்ற இப்பேரணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.