அரியலூர்: காற்று மாசுபாட்டைக் குறைக்க சென்னையில் சில நாட்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடங்களிலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களிலும் 31 மினி பேருந்துகள் இயக்கப்படும். காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், அடுத்த 10 நாட்களில் சென்னை நகரில் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்படும்.

மாறிவரும் வானிலை காரணமாக பொதுமக்களுக்கு பேருந்து சேவையில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் சென்னையில் விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ. ரத்னசாமி, எம்.எல்.ஏ.க்கள் கு. சின்னப்பா, கே.எஸ்.கே. கண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.