மதுரை: மதுரை நகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தெப்பக்குளம் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அனைவருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்ததும், அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும்.
சாப்பிடாவிட்டால், ரத்த வாந்தி எடுத்துக்கொண்டு வழியிலேயே இறந்துவிடுவீர்கள்…” என்றார். செல்லூர் ராஜு வேடிக்கைக்காகப் பேசுவது போல் பேசினாலும், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரும் அதை ஒரு பெரிய சகுனமாகக் கருதி முகம் சுளித்தனர்.

எப்போதும் தானாக முன்வந்து பேட்டி அளிக்கும் செல்லூர் ராஜு, தனது பண்ணை வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் காணாமல் போனது குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்கக்கூடும் என்பதால், அவர்களை கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.