கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெம் பழனிவேலுவின் வாழ்க்கை வரலாறு ‘கட்ஸ்’ வெளியீட்டு விழா கோவை நீலம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் டாடா குழும இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி டாக்டர் ஜெம் பழனிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா ஜி.கே.வாசன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் நூலுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேடையில் பேசியதாவது:-
ஒரு மாணவன் டாக்டராவது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் பணிபுரியும் மருத்துவராக மாறுவது மிகப்பெரிய ஒன்றாகும். படிப்பை பாதியில் நிறுத்திய ஜெம் பழனிவேலு மீண்டும் தனது படிப்பை வெற்றிகரமாக தொடர்ந்துள்ளார். அவர் மிகவும் மனிதாபிமான மருத்துவர் என்று கூறினார்.
டாடா குழுமத்தின் இயக்குநர் சந்திரசேகர் மேடையில் பேசியது:-
ஒருவர் எங்கு பிறந்தார் என்பது முக்கியமில்லை. அவன் எந்த நிலையை அடைகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வாழ்க்கையின் வெற்றி அமையும். நாம் சூழ்நிலைகளை மாற்ற முடியாது. அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி கிடைக்கும். பி.சி.ராய் விருது உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விருதுகளை டாக்டர் பழனிவேலு பெற்றிருப்பது சிறப்பு.
திருவள்ளுவர் ஒருவர் வெற்றி பெற அச்சமின்மை, அகங்காரம், அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு குணங்கள் வேண்டும் என்றார். அந்த குணங்கள் டாக்டர் பழனிவேலுவிடம் உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.
விழாவில் டாக்டர் பழனிவேலு ஏற்புரை ஆற்றினார்
அப்போது அவர் மேடையில் பேசியதாவது:-
கடந்த நூற்றாண்டில், பல்வேறு தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் பற்றிய புத்தகங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டன, ஆனால் மருத்துவர்கள் பற்றிய புத்தகம் வெளியிடப்படவில்லை. இந்தக் குறையைப் போக்க அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் மாநாடு நடத்தி மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டது. அதில், என் வாழ்வில் நடந்த சம்பவங்களும் சில பக்கங்களில் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகுதான் ஒரு முழு புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தபோது, அவர் எனது வாழ்க்கை வரலாற்றை எழுத ஊக்குவித்தார். அதனால்தான் வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதினேன். நாமக்கல் மாவட்டத்தில் வறண்ட பிரதேசத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் படித்தேன். எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்ததும் எனது கிராமம் கல்விக் கட்டணத்தைச் செலுத்தியது. எனது கல்விக்கு அடித்தளமிட்டவர்கள் எனது ஆசிரியர்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நன்றி தெரிவிக்கவே இந்தப் புத்தகத்தை எழுதினேன். விழாவில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். , காமராஜ், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல் அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தங்கமணி அண்ணாமலையிடம் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.