கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் 8-ம் வகுப்பும், மகள் கீர்த்திகா 7-ம் வகுப்பும் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளியில் தங்களை புறக்கணிப்பதாக கூறி அண்ணன், தம்பி இருவரும் பள்ளி சீருடையில் புத்தகங்களுடன் கலெக்டர் அலுவலகம் சென்று, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாட்டியுடன் தரையில் அமர்ந்து பாடம் படித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கலெக்டர் பிரசாந்த் பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரிடம் மாணவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் இருவரும் பெருமங்கலம் அரசு பள்ளியில் படிக்கிறோம். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியர் மனோகர் இருவரும் பள்ளி கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து கலெக்டரிடம் எனது தந்தை புகார் அளித்ததால், பள்ளியில் எங்களை ஒதுக்கி வைத்தனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.