மீனம்பாக்கம்: லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 206 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 220 பேர் இன்று பயணம் செய்யவிருந்தனர்.
பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன், விமானத்தின் இயந்திர செயல்பாடுகளை விமானி ஆய்வு செய்தார். அப்போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைக் கண்டுபிடித்தார். இயந்திரக் கோளாறை சரிசெய்ய பொறியாளர்கள் முயன்றனர். எனினும், அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதில் பயணம் செய்ய வேண்டிய 206 பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.