சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதை சரியான டீலர்களிடமிருந்து வாங்குவது மிகவும் முக்கியம். பிளாக் மார்க்கெட்டில் சிலிண்டர் வாங்குவது பாதுகாப்பாக இல்லை. கேஸ் சிலிண்டர் எப்போதும் தரைமட்டத்திலிருந்து 2 அடிக்கும் உயரத்திற்கு வைத்து, சுவரை ஒட்டியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், காற்றோட்டம் நிறைந்த இடத்தில் சிலிண்டரை வைக்க வேண்டும்.
பக்கவாட்டில் படுக்க வைக்காமல், நேராக நிற்க வைக்க வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகள் கேஸ் சிலிண்டர் குழாயை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவை எட்டாது என்று கவனிக்க வேண்டும். கூடவே, ரப்பர் குழாய்கள் சரியான தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த குழாய்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
ஒருவேளை சிலிண்டர் அல்லது குழாயில் கசிவு ஏற்படினால், உடனே சிலிண்டர் வால்வை மூடி, சமையலறையின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். பழைய சிலிண்டர் போட்டு, புதிய சிலிண்டர் மாற்றும் போது, திடீரென கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். வீடு முழுவதும் அனைத்து விளக்குகளையும் அணைத்து, எந்தவொரு மின்சார சாதனங்களும் செயல்படாதபடி வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு, போன், SMS, ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல வழிகளிலும் புக்கிங் செய்ய முடியும். Indane Gas பயன்படுத்துவோர் 7588888824 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். HP Gas வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற எண்ணில், Bharat Petroleum வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணில் “Hi” என்று மெசேஜ் அனுப்பி சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும்.
மேலும், Paytm, PhonePay, Google Pay மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம். கிரெடிட் கார்டு மூலம் புக்கிங் செய்யவும், அதற்கான சலுகைகளை சரிபார்த்து, அதற்கேற்ற தளத்தில் புக்கிங் செய்ய வேண்டும்.