கடலூர்: வேளாங்கண்ணிக்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றவர்களின் கார் கடலூர் மாவட்டம் விளக்கப்பாடியில் விபத்துக்குள்ளானதில், ஏர் பலூன் வெளியான போதும், ஓட்டுநருக்கு அருகே அமர்ந்து பயணித்த பெண் உயிரிழந்தார், 4 பேர் காயமடைந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதிகாலையில் காரில் சென்ற போது ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தரைப்பால தடுப்பில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.