திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார்.
நகைகள் காணாமல் போனது தொடர்பான புகாரின் பேரில் சிறப்பு காவல் படை நடத்திய விசாரணையின் போது அவர் இறந்தார். இந்த வழக்கில் தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

ஜூலை 12-ம் தேதி முதல் சுமார் 27 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மடப்புரம் வந்த சிபிஐ குழு, அஜித் குமாரின் தாயார் மாலதியிடம் மீண்டும் விசாரணை நடத்தியது.