சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- மேற்கு திசை காற்றின் வேகத்தில் நிலவும் மாற்றம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியாக இருக்கும்.
குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.