கரூரில் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனியார் ஹோட்டலில் தங்கியபின் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான அரசியல் கருத்துகளை வெளியிட்டார். 2026ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இது எழுத்துப்பூர்வமாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி எழுத்து கொடுத்ததை விட தனது வாக்குறுதி முக்கியம் என கூறியதாகவும், அதிமுக கூட்டணியில் இந்த நம்பிக்கை தங்களுக்குள் உள்ளது என்றும் அவர் கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளிக்க, அதற்கான பதில் அவரிடம் கேட்டே தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
2026ல் கூட்டணி ஆட்சி உருவானால் தவறுகள் நடைபெற்றால் அதனை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்றும், அது ஜனநாயகத்திற்கு நல்லது என்றும் பிரேமலதா கூறினார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட இரங்கல் அறிவிப்பை அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் வரவேற்றோம் என்றும் தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் விரைவில் இரண்டே நாட்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தேமுதிக செயலில் ஈடுபட்டு வருகிறது என கூறினார். கரூர் மாவட்டத்தில் மணல் மற்றும் கனிமவள கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் இதைத் தடுத்து, பொதுமக்களின் நலனுக்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரேமலதா வலியுறுத்தினார்.