திருச்சி: திருச்சி – சென்னை இண்டிகோ விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ெளியாகி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் ஏ.டி.ஆர். ரக விமான சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (டிச., 16) முதல் 31ஆம் தேதி வரை, காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகள் மட்டும் அதிக இருக்கைகள் கொண்ட ‘ஏர்பஸ்’ விமானங்களில் இயக்கப்படும்.
ஏ.டி.ஆர். விமானங்களில் 76 பேர் பயணிக்க முடியும் நிலையில், ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம். விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.