
சென்னை: முன்னாள் படைவீரர் கொடி நாள் வசூலில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பாம் குரோவ் சைனிக் நிறுவனத்தில் நிதி மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்துறை அமைச்சர் தலைமையில் நேற்று முன்னாள் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் படைவீரர் கொடிநாள் வசூல் இலக்கில் ரூ. 139.44 சதவீதம் வசூல் செய்து மாநில அளவில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து பல்வேறு நிதி உதவியாக 25 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு ரூ.4 லட்சத்து 69,187 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.