‘சென்னை சங்கமம் நம்ம ஊரு விழா 2025’ நிகழ்ச்சியை, ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கும், ‘சென்னை சங்கமம் நம் ஊரு விழா 2025’க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன் பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த ஆண்டு சென்னை சங்கமம் நம்ம ஊரு விழா நடத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நடத்தப்படும். இதற்காக 7 மண்டலங்களில் இருந்து சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சங்கமம் நம்ம ஊரு விழா 2025 நிகழ்ச்சியை ஜன., 13-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
அதன்பின், 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 18 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி என பல்வேறு பகுதிகளிலும் சென்னையில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னையில் குறிப்பாக பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசு பள்ளி வளாகம், நடேசன் நகர், தி.நகர் பகுதி, அண்ணா நகரில் டவர் பார்க், கோவை ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகரில் சிவன் பூங்கா, வளசரவாக்கத்தில் உள்ள மேலேக் பள்ளி வளாகம், பழனியப்பா நகர், கொளத்தூர் பேரூராட்சி மைதானம், ராபின்சன் விளையாட்டு மைதானம், முரசொலி மாறன் மேம்பாலம் பூங்கா, பரத சாரணர், சாரணியர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுமார் 1,500 கலைஞர்கள் பங்கேற்பார்கள், இது ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு குழுக்களாக நடத்தப்படும். இதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன, புதிய முறைகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.