சென்னை : சென்னை-திருச்சி சேவையை ஏர் இந்தியா தொடங்குகிறது.என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இருந்து திருச்சி வரை மார்ச் 23ம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது. அன்று மாலை 6:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும்.
மீண்டும் இந்த விமானம் இரவு 8:15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.