நியோ டைடல் பார்க் திறப்பு விழா, புதுமை பெண் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 2 நாட்கள் பங்கேற்கிறார். இது தொடர்பாக தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்றும் நாளையும் தூத்துக்குடி வருகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பூங்காவை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாளை காலை 8.30 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெறும் விழாவில், ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய். பின்னர் கன்னியாகுமரி செல்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.