சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க. தமிழரசு, உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக அவர் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதத்திலும் உடல் நலக்குறைவு காரணமாக தமிழரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
தமிழரசின் மகன் நடிகர் அருள்நிதி. அவர் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றாலும், கடந்த தேர்தல்களில் உதயநிதி ஸ்டாலினுக்கும், நாடாளுமன்றத் தேர்தலின்போது தயாநிதி மாறனுக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் உட்பட குடும்பத்தினரும் உறவினர்களும் தமிழரசின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர் நிலைமை ஸ்திரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.