சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களை பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்.
நேஷனல் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 1996-ம் ஆண்டு முதல் 16-ம் நாள் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கும் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் பணியை கௌரவிக்கும் வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தில், உண்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் பத்திரிகையாளர்களின் அயராத முயற்சிக்கு தலை வணங்குகிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் துணிச்சல் ஜனநாயகத்தின் கடைசி அரண். உறுதியாக நிற்போம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்“ என பதிவிட்டுள்ளார்.