நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு, நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் உமாநிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கண்காட்சியினை துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 260 அரசுப் பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளிலிருந்து 6 முதல் 12 வகுப்பைச் சேர்ந்த 600 பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
பங்கேற்ற 600 பள்ளி மாணவர்களுக்கும் குழந்தை விஞ்ஞானி என்ற சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 72 மாணவர்கள், வருகிற பிப். 2ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
நிகச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர்கோவிந்தராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் துரைசாமி, பேராசிரியர் சர்மிளா பானு, மணிராஜா, திரு. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.