பயணிக்கும் மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய . இந்த வகை ரயிலுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆர்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் நவீன தொழில்நுட்பங்களுடன் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் கணிசமாக குறையும் என்று சீனா கூறியுள்ளது. இதுகுறித்து சீன ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ரயில் சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 450 கி.மீ வேகத்தில் சென்றது. இது புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த CR-450 புல்லட் ரயில் அதிவேகத்தில் பயணிப்பதால், ரயில்வே துறையில் புதிய சாதனை படைத்துள்ளோம். இந்த ரயில் வேகம், ஆற்றல் நுகர்வு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் உலகளவில் புதிய தரங்களை நிர்ணயித்துள்ளது.
சீனாவில் தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் அதிவேக CR400 புல்லட் ரயில் உள்ளது. இதையடுத்து இந்த ரயில் மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் சாதனை படைத்துள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த ரயில், பல்வேறு சோதனைக் கட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே பயன்பாட்டுக்கு வரும். சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மிகவும் லாபகரமாக இயக்கப்படுகின்றன.
மற்ற வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அதிக லாபம் ஈட்டவில்லை என்றாலும், அதிவேக ரயில் சேவைகள் நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கும் அதிவேக ரயில்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. விரைவில் CR450 புல்லட் ரயில்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைதூரத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும், விரைவாகவும் மற்றொரு நகரத்திற்குச் செல்ல அனுமதிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.