தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் சீன பட்டாசுகள், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்திவரப்பட்ட பட்டாசுகள், பொம்மைகள் என 7 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு உபகரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த 4 கன்டெய்னர்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது தரமற்ற சீன பொருட்களை கடத்திவருவது தெரியவந்தது.
இது தொடர்பாக 4 பேரை கைது செய்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.