சென்னை: செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்து இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை என்றென்றும் மாற்றி அமைத்தார்.
இன்று ஜான் மார்ஷலின் பங்களிப்பை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பொருட்களை அடிப்படையாக வைத்து திராவிட இனத்துடன் சரியான உறுதியுடன் தொடர்புபடுத்தினார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு மற்றும் சர் ஜான் மார்ஷலின் முழு உருவ சிலையுடன் தமிழகத்தில் கொண்டாடப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.