
கோவை: சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரங்கராஜ் மீது பல்வேறு முறைகேடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் அவர் ஊராட்சி மன்ற விதிகளை மீறி செயல்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக, உரிய அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு வரைபட அனுமதி வழங்கியதாக புகார் முன்வைக்கப்பட்டது. மேலும், கொரோனா காலத்தில் சுகாதாரப் பொருட்கள் அதிக விலைக்கு வாங்கியதாகவும் பல முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
இதன் பின்னணியில், சென்னை உயர் நீதிமன்றம் ரங்கராஜை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் ரங்கராஜை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.