சென்னை: கொள்ளு மசியல் மிகவும் சுவையான ஆரோக்கியமான அபாரமான ஒரு துணை உணவாகும். கொள்ளு ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதை மசியல், ரசம், துவையல் என பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
கொள்ளுவில் உள்ள நார்சத்து மற்றும் புரதச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து நம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு. இதன் காரணமாக சளி, இருமல் மற்றும் காய்ச்சலை முதலான பிரச்னைகளைத் தீர்க்க இது உதவுகிறது. இது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் இயல்பு கொண்டதால் கோடைக்காலத்தில் சற்று குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் கொள்ளு உணவை கட்டாயம் சேர்த்துக் கொள்ளப் பழகவேண்டும்.
கொள்ளு மசியல் செய்யத் தேவையான பொருட்கள்:
கொள்ளு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – மூன்று
பூண்டு – 5 பல் எண்ணிக்கை
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மஞ்சள் தூள்
உப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை: ஒரு கப் கொள்ளை நன்றாகக் கழுவிய பின்னர் அதை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் அதை மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சத்தூளைப் போட்டு ஆறு விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, சீரகம், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக