கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை கல்லூரிகளும் ஜூன் 16-ம் தேதி திறக்கப்படும் என மாநில கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஏப்ரல்/மே செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது.

BA, BSc., BCom உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள். பி.பி.ஏ., செமஸ்டர் தேர்வு எழுதுகின்றனர். செஸ்டர் தேர்வு முடிந்து மே மாதம் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும். ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு, 2025 – 26-ம் கல்வியாண்டுக்கான செமஸ்டர் வகுப்புகள், ஜூன், 16-ல் துவங்க உள்ளன.
2025-2026-ம் கல்வியாண்டு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 16-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படும்.”