விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை நகர் மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், “இந்தக் கூட்டம் கலவரமான முறையில் நடைபெற்றது. வரும் சட்டசபை தேர்தலில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவினர் பணியாற்றி வருகின்றனர்,” என்றார்.
விஜய் அழைத்தால் மாநாட்டிற்கு செல்வாரா என்றும், விஜய் கட்சியுடன் கூட்டணி அமையுமா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் முடிவெடுப்பார். அண்ணா திமுக மிகப்பெரிய இயக்கம். எங்களுடன் கூட்டணி வைக்காதவர்களே இல்லை,” என்றார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருவதாகவும், மாவட்டம் தோறும் இருக்கக்கூடிய அமைச்சர்கள் குடும்பத்தை வளப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
உற்றார் உறவினர்களுக்கு பதவி கொடுத்து வருகின்றனர். தலைமை முதல் தொண்டர்கள் வரை குடும்ப ஆட்சி நடக்கிறது. “காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி: மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு!” என்றும் கூறினார்.
அண்ணா காலத்தில் இருந்து திமுகவில் எத்தனையோ தியாகிகள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததால் திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த பரபரப்பு தேர்தல் நேரத்தில் வெளிப்படும். இது அண்ணா திமுகவுக்கு சாதகமாக அமையும். திமுக என்றால் குடும்ப ஆட்சிதான். அதிமுக என்றால் சட்டத்தின் ஆட்சி என்று அவர் கூறினார்.