மதுரை: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பழமையான மண்டபங்களும் படிகளும் உள்ளன.
பழையவற்றை மாற்றாமல் புதுப்பிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித்துறையினர் கூறுகையில், “தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மக்கள் வசிக்கும் இடங்களில், கழிவுகள் அடிக்கடி கலக்கின்றன.
ஆறுகள் மாசுபடுவதற்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே நடவடிக்கை எடுத்தாலும், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நீதிபதிகள், ”தாமிரபரணி ஆற்றில் உரிமை கோர நெல்லை மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும். பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ”இந்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக கோர்ட் நேரில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் உள்ளாட்சி பகுதிகளில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.
உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.