திருச்சி: திருச்சியில் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் புற்கள் மேய சென்ற மாடுகள் திடீரென நீர்வரத்தால் காவிரி சிக்கி தவிக்கின்றன.
திருச்சி கீழ சிந்தாமணி அருகே காவிரி ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் முளைத்துள்ள புற்களை மேய்வதற்காகச் சென்ற சில மாடுகள் சென்றன.
இந்நிலையில் திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன. நேற்று மதியம் தொடங்கி, மணல் திட்டிலேயே சிக்கியுள்ள மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவற்றின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.