சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திய கார் குறித்து தன்னிடம் தகவல் இருப்பதாக கூறினார். பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் முதல்வர் வேட்பாளராக இருந்தால் அதிமுக இனி வெற்றி பெறாது என்றும் தினகரன் வலியுறுத்தினார்.
அவர் மேலும், எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வராக ஆனது பாஜகவின் ஆதரவால் தான் என்றும், பல எம்.எல்.ஏக்களை காப்பாற்றியதால்தான் அவர் அந்த நிலைக்கு வந்தார் என்றும் கூறினார். “எனக்கு பழனிசாமியுடன் தனிப்பட்ட பகை இல்லை. ஆனால், அவரை முதல்வர் வேட்பாளராக முன்வைத்தால் அதிமுக கூட்டணி தற்கொலை செய்யும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

தினகரன், “அமமுக எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்காது. அப்படி சென்றால் அது கூட்டணிக்கே ஆபத்து. நான் நாளுக்கு நாள் பேச்சு மாறுபடும் வகையில் பேசுபவன் அல்ல. என் கருத்து எப்போதும் ஒரே மாதிரிதான்” என்றார். மேலும், “எடப்பாடியின் முகம் வாடியுள்ளது. அவர் வந்த கார் யாருடையது எனக்கும் தெரியும்” என தினகரன் சாடினார்.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது விரைவில் வெளிப்படும் என்றும், டிசம்பரில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் தினகரன் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
#