சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை:- திருவாரூர் மாவட்டம் கொரட்டாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண், கத்தியதால் ஆற்றில் தள்ளி கொல்லப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.