சாத்தனூர்: தென் பெண்ணையாற்றில் நீர் திறப்பு 40,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையிலிருந்து தென் பெண்ணையாற்றில் நீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் வெள்ள பாதிப்புக்குள்ளான ஆல்பேட்டை சுங்கச்சாவடி, கண்டக்காடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை மிக அதிகமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் 25 ஊராட்சி ஒன்றியங்களும் நான்கு மாநகராட்சி வார்டுகளும் கடும் பாதிப்பை சந்தித்தன.
வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.