கும்பகோணம்: வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் வட்டார மஹல்லா ஜமாஅத்துக்கள், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஏராளமான ஜமாஅத்தார்களும், திரளான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.