சென்னை: சென்னையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மனோரமா ஹிதேஷி என்ற 78 வயது மூதாட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது வீட்டில் நாயை செல்லமாக வளர்த்து வருகிறேன். ஆனால், நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நலச் சங்கம், செல்லப்பிராணிகள் பொது இடத்தில் மலம் கழித்தால், அதன் உரிமையாளர்கள் 10 நிமிடங்களில் அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இல்லையெனில் அபராதம் ரூ. 1,000 முதல் முறையாக விதிக்கப்படும், ரூ. 2,000 இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாக ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும். இதே நிலை நீடித்தால், குடியிருப்போர் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். அதேபோல் செல்லப்பிராணிகள் சிறுநீர் கழித்தால் ரூ.250 முதல் ரூ. 750 வரை விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை லிஃப்ட் மூலம் அழைத்துச் செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்கான விதிகளின்படி இந்த கட்டுப்பாடுகள் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை பெருநகர 16-வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் விலங்குகள் நல வாரிய விதிகளுக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், விலங்குகள் நல வாரிய விதிகள் அடுக்குமாடி சங்கங்களை ஒழுங்குபடுத்துவதில்லை என குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “விலங்குகள் நல வாரிய விதிகள் சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதால், தங்களை ஒழுங்குபடுத்துவதில்லை என்று கூற முடியாது. எனவே, அபராதம் விதிக்கப்படும் என குடியிருப்போர் நலச் சங்கம் கொண்டு வந்த கட்டுப்பாடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தால் அது செல்லாது” என்றும், அவற்றை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதையும் நீதிபதி தடை செய்தார்.