பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா செட்டிகுளத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோயிலுக்கு ஏற ஏறக்குறைய 200 படிகள் உள்ளன. சித்திரை தினத்தன்று இந்தப் படிகளில் படி பூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினமான இன்று பதி பூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
படி பூஜை விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கொடி ஏந்தி அரோகரா… என்ற பக்தி கோஷத்துடன் மலையை வலம் வந்து கிரிவலம் வந்தனர். பின்னர் திருவிளக்கு பூஜை, படி பூஜை நடந்தது. செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவலிங்கை, பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், செஞ்சேரி, குரும்பலூர், அம்மாக்பாளையம், சீதேவிமங்கலம், இங்கலம்பாளையம், சீதேவியூர், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள்.

இதில் ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, தெரணி, ஈச்சங்காடு, மருதடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு படிக்கட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். அதன்பின், தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.