சென்னை: வைரம் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் விலை உயர்ந்த நவரத்தின கற்களில் ஒன்று. எவ்வளவு அடி ஆழத்தில் தன்னை மறைத்துக் கொண்டு கரிய நிற பொருளாய் வெட்டி எடுக்கப்படும் வைரம், பட்டை தீட்ட தீட்ட தன் பளபளப்பையும், மதிப்பையும் அதிகரித்து கொள்கிறது.
வைரங்கள் சிறியது முதல் பெரிய அளவு வரை கற்களாய் வெட்டி எடுக்கப்பட்டு பின் ரசாயன மேற்பூச்சுகளால் சுத்தம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது.
இன்றைய நாளில் வைரங்கள் பல அணிகலன்களாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது. காரணம் வைரங்கள் அணிவதில் இருந்த தோஷம் என்ற தயக்கம் களையப்பட்டே வைரங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் காரணமாய் மக்கள் என்றென்றும் மதிப்பு உயர்ந்த வைர நகைகளை அழகிய டிசைனில் வாங்கி அணிகின்றனர்.
வைரத்தில் எண்ணற்ற வைர நகைகள் உருவாக்கி தரப்படுகிறது. மோதிரம், காதணி, நெக்லஸ், வளையல் போன்றவாறு பெண்கள் அணிகின்ற ஆபரணங்கள் அதிகளவு உற்பத்திச் செய்யப்படுகின்றன. ஆண்கள் அணிகின்றவாறு வைர மோதிரம், பிரெஸ்லெட், கடுக்கன், கோட் பட்டன்கள் போன்றவைகளும் உருவாக்கப்படுகின்றன. வைர நகைகள் முன்பு அதிகளவு தங்கத்தின் பின்னணியில்தான் ஜொலித்தன. இன்றைய நாளில் விலை உயர்ந்த வெள்ளை உலோகமான பிளாட்டினத்தில் வைரங்கள் ஜொலிக்கின்றன. இரண்டு விலை மதிப்பில் உயர்ந்த பொருட்கள் இணைந்த நகைகள் மதிப்பில் உயர்ந்து விளங்குகின்றது.
டைமண்ட் வடிவ இடைவெளியுடன் உருவாகும் வைர நெக்லஸ்
வைர நெக்லஸ்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதனை வடிவமைப்பதில் உலகளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் வைர நெக்லஸ்களை வடிவமைக்கின்றன. வைர நெக்லஸ் அணிந்தாலே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதன் சிறப்பான வடிவமைப்பு மேம்பட்டதாய் இருந்தால் அந்த வைர நெக்லஸ்-யை விட்டு கண் அகலாது.
புதிய வைர நெக்லஸ் கழுத்தில் ஓர் விலை பின்னலாய் தொங்கும் வகையில் டைமண்ட் வடிவில் உட்புறம் இடைவெளி விட்டு பிளாட்டின உலோகத்தில் வரிசையாய் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. டைமண்ட் வடிவின் கீழ் பகுதியில் வட்ட வடிவில் வளைந்த வைரத் தொங்கல்களுடன் அதற்கு கீழ் சிறு நீலநிற கற்கள் இடைவெளி விட்டு தொங்க விடப்பட்டுள்ளது. வடிவமைப்பில் உள்ள இந்த நெக்லஸ் சற்று அகல வரிசை நெக்லஸ் எனபதால் அதிக வைரம் பதியப்பட்டது. அதற்கு ஏற்ப அதன் விலையும் அதிகமானது.