சென்னை; இயக்குனர் செல்வராகவன் இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.
இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
கடந்த மாதம் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன். ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை பாரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.