சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் வீடு வீடாக ரேஷன் பொருட்களை விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொதுமக்கள் அறியும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அறிவிப்புப் பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.