விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. இதுவரை 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 7வது சுற்று முடிவில் திமுக 44,780 வாக்குகளும், பாஜக 17,359 வாக்குகளும், தேசிய ஜனநாயக கூட்டணி 3556 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவில் 311 வாக்குகள் பதிவாகின. திமுக 24,421 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும், தொகுதியின் பிற இடங்களிலும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் முதல் பணியாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் கையெழுத்து இல்லாததால் முதல் வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
தபால் வாக்குகள் எண்ணும் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 10 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார். இதுவரை 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 7வது சுற்று முடிவில் திமுக 44,780 வாக்குகளும், பாஜக 17,359 வாக்குகளும், தேசிய ஜனநாயக கூட்டணி 3556 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவில் 311 வாக்குகள் பதிவாகின. திமுக 24,421 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.