சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், அ.தி.மு.க., – பா.ஜ.க., கூட்டணி, 4 மாதம் கூட நீடிக்குமா என, தெரியவில்லை.

பா.ஜ.க.,வுக்கு எடுபிடி போல இருந்து அ.தி.மு.க., கூட்டணி அறிவித்தது. செங்கோட்டையன், டெல்லி சென்றதும், பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார்.